WELCOME TO NAIRS COLLEGE OF EDUCATION

NAIRS COLLEGE OF EDUCATION
COIMBATORE

B.ED Tamil

Nairs College Of Education

B.ED Tamil

பாடத்தின் நோக்கங்கள்

  • தமிழ்மொழிகற்பித்தலின் நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தைஅறிதல்.
  • கற்பித்தல் திறன்களைப்புரிந்துகொண்டு திறன்பெறுதல்.
  • கற்பித்தல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தல்.
  • கற்பித்தல் முறைகளைத் தொகுத்தறிதல்.
  • கற்பித்தல் ஊடகங்களைக் கையாளும் திறன்பெறுதல்.

அலகு- 1: தமிழ் கற்பித்தலின் நோக்கங்களும் குறிக்கோள்களும்

  • தமிழ் கற்பித்தலின் அடிப்படை, விழுமம் (ஒழுக்கநெறி, சமுதாயமேன்மை, இறையுணர்வு) குறிக்கோள்களும் நோக்கங்களும்: கற்பித்தலுக்கானநோக்கங்கள் மற்றும் நடத்தைக்கானநோக்கங்கள் - தமிழ் கற்பித்தலின் தேவை, முக்கியத்துவம் - கற்பித்தலுக்கானபுளுமின் வகைமைநெறி: அறிவுக்களம், உணர்தல் களம் உளஇயக்கசார் களம் - திருத்தப்பட்டபுளுமின் வகைமைநெறி 2001(ஆண்டர்சன் &கிரத்வால்) களங்களுக்கு இடையேயானதொடர்பு, பாடங்களுக்கு இடையேயானதொடர்பு.

அலகு-2: கற்பித்தல் திறன்கள்

  • நுண்ணிலைக் கற்பித்தல்: பொருள்,வரையறை படிநிலைகள் - சுழற்சி - தொடங்குதல் திறன், விளக்குதல் திறன், வினாக்கேட்டல் திறன்,பல்வகைத்தூண்டல் திறன், வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன், கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன், முடிக்கும் திறன்,உற்றுநோக்கல், இணைப்புப்பாடம், நுண்ணிலைக் கற்பித்தலுக்கும் வகுப்பறைக் கற்பித்தலுக்கும் இடையேயானவேறுபாடு-பாடநிகழ்வு.

அலகு-3: கற்பித்தல் அணுகுமுறைகள்

  • பாடம் கற்பிப்புத் திட்டத்தின் அணுகுமுறைகள், இன்றியமையாமை- பாடம் கற்பித்தலின் படிநிலைகள் கற்பித்தலைஒழுங்கமைத்தல்: நினைவகநிலை (ஹெர்பார்டியன் மாதிரி), புரிதல் நிலை (மோரிசன் கற்பித்தல் மாதிரி),பிரதிபலிப்புநிலை (பிக்கி&ஹண்ட் கற்பித்தல் மாதிரி) பாடம் கற்பித்தலுக்கான நோக்கங்களை வரையறுத்தல் - பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல் - அலகுத்திட்டம் - அலகுத்திட்டம் தயாரித்தல்.

அலகு- 4: கற்பித்தல் முறைகள்

  • ஆசிரியர் மையக் கற்பித்தல்: விரிவுரைமுறை - பகுத்தறிமுறை, தொகுத்தறிமுறை, விதிவருமுறை மற்றும் விதிவிலக்கமுறை - செயல்விளக்கமுறை - மாணவர் மையக் கற்பித்தல்: கருத்தரங்கம் - பட்டிமன்றம் - குழு விவாதம் - குழு கற்பித்தல் முறை - இடைவினையாற்றகற்றல், கெல்லர் திட்டம் - செயல்வழிக்கற்றல் - படைப்பாற்றல் கல்வி - மனவரைபடம் - கூடுதல் படைப்பாற்றல் கல்வி.

அலகு-5: கற்பித்தல் ஊடகம்

  • கற்பித்தல் ஊடகவகைப்பாடு - வகுப்பறைக் கற்பித்தலில் ஊடகத்தின் பயன்பாடு - அண்மைக் காலகற்பித்தல் போக்குகள்:மின்-கற்றல் - விண்ணரங்கம் - தகவல் தொடர்புசெயற்கைக்கோள் - மொழிபயிற்றாய்வுக்கூடம், செயற்கைநுண்ணறிவு (Artificial Intelligence, மெய்நிகர் தோற்றம் (Augmented reality) - இணைத்துக் கற்றல் (Blended Learning) - இணைய நூலகம் இணைப்பு நிஜமாக்கம் (Virtual reality).

பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகள்

  • தமிழ்மொழிகற்பத்திலின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் குறித்துகலந்துரையாடல்.
  • ஒவ்வொருகற்பித்தல் திறனிலும் மேம்பட்டபயிற்சியினை பெற்றிட பயிலரங்கங்கள் ஏற்பாடுசெய்தல்.
  • பல்வேறுகற்பித்தல் அணுகுமுறைகளுக்கேற்பபாடம் கற்பிப்புத்திட்டம் தயாரித்து அறிக்கை சமர்ப்பித்தல்.
  • பல்வேறுகற்பித்தல் முறைகள் குறித்துஆசிரியர்/வல்லுநர் கருத்துரைநிகழ்த்துதல்.
  • பல்வேறுகற்பித்தல் ஊடகங்களை திறம்பட பயன்படுத்த மொழி ஆய்வகங்களில் பயிற்சிபெறல்.